தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற காமெடி கலைஞர்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நெல்லை சிவா.பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஆண் பாவம் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் நெல்லை சிவா.

தொடர்ந்து பல படங்களில் வடிவேலு மற்றும் விவேக் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து இவர் செய்த காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகின.இவரது மண்மணம் மாறாத நெல்லை தமிழ் இவரது அடையாளமாக ரசிகர்கள் மத்தியில் மாறியது.

தமிழில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர் படங்களிலும் நடித்து அசத்தியிருந்தார் நெல்லை சிவா.பல முக்கிய படங்களில் காமெடியில் கலக்கிய இவர் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்று ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

சமீபத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வந்தார் நெல்லை சிவா.தற்போது உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை சிவா காலாமானர் என்ற துக்க செய்தி கிடைத்துள்ளது.இவரது மறைவை எதிர்பாராத ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.