கன்னட சினிமாவில் பொர்க்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ப்ரணிதா சுபாஷ் தொடர்ந்து தமிழ் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.நடிகர் அருள்நிதி நடித்து வெளிவந்த உதயன் திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர். 

நடிகர் கார்த்தியின் சகுனி மற்றும் நடிகர் சூர்யாவின் மாஸ் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ப்ரணிதா தமிழில் மிகுந்த பிரபலமடைந்தார்.தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் நடித்து வந்த ப்ரணிதா அடுத்ததாக தற்போது பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார். 

"புஜ் தி பிரைட் ஆப் இந்தியா", "ஹங்கமா 2"  என ப்ரணிதா நடித்த பாலிவுட் திரைப்படங்கள் திரைக்கு வரவுள்ள நிலையில் நடிகை ப்ரணிதா தற்போது தொழிலதிபர் நிதின் ராஜூவை திருமணம் செய்துகொண்டார். நீண்ட நாட்களாக  நடிகை ப்ரணிதாவும் நிதின் ராஜுவும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதல் தற்போது காதல் திருமணமாக நடந்தேறியுள்ளது. 

கொரோனோ வைரஸ் பரவல் காரணமாக நாட்டின் பல மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மிகவும் நெருக்கமான உறவினர்கள் நண்பர்களோடு எளிமையான முறையில்  பெங்களுருவில் ப்ரணிதா - நிதின் ராஜு திருமணம் நடந்துள்ளது. ப்ரணிதா - நிதின் ராஜுவின் திருமணத்திற்கு தென்னிந்திய திரை உலகை சேர்ந்த பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.