சன் டிவியில் வெளியான சித்தி மெகா தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் டேனியல் பாலாஜி. தொடர்ந்து அலைகள் தொடரிலும் நடித்தார் நடிகர் ஸ்ரீகாந்த்-சினேகா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம்  ஏப்ரல் மாதத்தில் படத்தில்  துணை நடிகராக அறிமுகமான டேனியல் பாலாஜி தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவனின் காதல் கொண்டேன் திரைப்படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் காக்க காக்க திரைப்படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். 

மீண்டும் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்த டேனியல் பாலாஜி வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு வில்லனாக மிரட்டினார். தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனின் முதல் திரைப்படமான பொல்லாதவன் திரைப்படத்தில் தனுஷுக்கு வில்லனாக ரவி என்ற கதாபாத்திரத்தில் வடசென்னையில் வசிக்கும் ஒரு வாலிபராகவே  வாழ்ந்திருந்தார். 

தொடர்ந்து பல மொழிகளில் பல திரைப்படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார் டேனியல் பாலாஜி. தனது  எதார்த்தமான நடிப்பாலும் குரலாலும் தமிழ் சினிமாவில்  டேனியல் பாலாஜிக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

 இந்த நிலையில் டேனியல் பாலாஜி  காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார் பரிசோதனையின் முடிவில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியானது. நோயின் தீவிரம் சற்று அதிகமாக இருப்பதால் டேனியல் பாலாஜி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். டேனியல் பாலாஜி விரைவில் குணமடைந்து வரவேண்டி சமூகவலைதளங்களில் ரசிகர்களும் பல சினிமா பிரபலங்களும்  தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.