தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்த பிரபல நடிகையான ஆலியா மானசா கலைஞர் டிவியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட-10” நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சூப்பர்ஹிட்டான “ராஜா ராணி” தொடரில் “செம்பா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

ராஜா ராணி தொடரில் இவருக்கு ஜோடியாகவும் கதாநாயகனாகவும் நடித்த நடிகர் சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் சஞ்சீவ்-ஆலியா மானசா காதல் தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது. 

இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி-2 மெகா தொடரில் நடிகை ஆலியா மானசா கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறார். தமிழில் விஜய் தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகியாக நடிக்கும் ஆலியா மானசாவுக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசாவை 34 லட்சத்திற்கும்  அதிகமானோர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது ஆலியா மானசா பைக் ஓட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி தொடர்களில் கதாநாயகியாக நடிக்கும் ஆலியா மானசா பைக் ரைடிங் செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது அந்த வீடியோவை பலர் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களும்  பகிர்ந்து வருகிறார்கள்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by alya_manasa (@alya_manasa)