ஹாலிவுட்டில் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கெய்பா பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், செலிபிரிட்டி க்ரஷ், கிறிஸ்மஸ் கூப்பன், டெவில்ஸ் நைட் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்துள்ளது. இதை தவிர சமீபத்தில் வெளியான லியாம் நீசனின் தி மார்க்ஸ்மேன் படத்தை விநியோகம் செய்தது. தொடர்ந்து தற்போது புதிய பாப் ஆல்பம் பாடல் ஒன்றையும் தயாரித்துள்ளது

பாப் மற்றும் ராப் இசை உலகில் முன்னணி நட்சத்திரங்களான ஒமர் குடிங் மற்றும் லெஸ்லீ லூயிஸ் இருவரும் இணைந்து என்டூரேஜ் பாடலை உருவாக்கியுள்ளனர். நடிகர் நெப்போலியன் மற்றும் இசையமைப்பாளர் - நடிகர் ஜி வி பிரகாஷ் ஆகியோரை ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய கெய்பா இன்க் தலைவரான திருச்சியைச் சேர்ந்த டெல் கே கணேசன் இந்த இசை ஆல்பத்தை தயாரித்து வெளியிடுகிறார்.

பாப் இசை உலகில் ஏடிஜி என பிரபலமாக, மக்கள் அழைக்கும் அஸ்வின் கணேசன் பாடலுக்கு இசை அமைத்துள்ளார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 29-ஆம் தேதி இந்த பாடல் போன்ற பிரபலமான பல இசை தளங்களில் வெளியானது. என்டூரேஜ் பாடல் வெளியான சில தினங்களிலேயே உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்களை கவர்ந்து மிகுந்த வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது

எனவே தற்போது இந்த பாடலின் வீடியோ பாடல் யூட்யூபில் வெளிவர உள்ளது இயக்குனர் ரிக்கி புர்சலின் இயக்கத்தில் நேர்த்தியான காட்சி அமைப்புகளோடு உருவாகியிருக்கும் இந்த என்டூரேஜ் பாடலின் வீடியோ வருகிற ஜூலை 16ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் யூடியூபில்  வெளியானது.