கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் அதுவும் சென்னையில் தினமும் 1000த்துக்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.இதனை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் சீரியல் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து அனைத்து தொடர்களின் ஷூட்டிங்குகளும் தொடங்கின.சீரியல் ஒளிபரப்பில் முக்கிய பங்கு வகிப்பது சன் டிவி தான்,அதிக சீரியல்கள் அதிக ரசிகர்கள் என்று இவர்கள் ஒரு தனி முத்திரையை பதித்துள்ளனர்.இவர்களது TRP-க்கு முக்கிய காரணமே பல சூப்பர்ஹிட் சீரியல்கள் தான்.சன் டிவியில் 4 தொடர்கள் சில காரணங்களால் கைவிடப்பட்டது, மற்ற சீரியல்களில் சில மாற்றங்களுடன் ஷூட்டிங்குகள் தக்க பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

கடந்த ஜூலை 8ஆம் தேதியே ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் சன் டிவியில் புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பு தொடங்கியது.விறுவிறுப்பாக நகர்ந்து வரும் புதிய எபிசோடுகளை ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பட்ட சீரியல் பூவே பூச்சூடவா , இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வரும் ராதிகா ப்ரீத்தி தற்போது ஒரு ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.சூர்யாவின் சூரரைப் போற்று படத்தின் சூப்பர்ஹிட் பாடலான காட்டு பயலே பாடலுக்கு நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராதிகா.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

View this post on Instagram

Kaatu payale...❤️#Poovarasi #pooveunnakaga @suntv

A post shared by Radhika Preethi_official💖 (@iamradhikapreethi) on