2008-ம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதனைத்தொடர்ந்து தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு ஜிவி பிரகாஷ் நடித்த குப்பத்து ராஜா படத்தில் நடித்தார். 

Poonam Bajwa Tweets About Ajiths Valimai Album

இந்நிலையில் பூனம் பாஜ்வா தனது ட்விட்டர் மூலம் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது யுவன் ஷங்கர் ராஜா பற்றி கேட்ட ரசிகருக்கு அவர், லிட்டில் மேஸ்ட்ரோ... வலிமைபட பாடல்களுக்கு ஆர்வமாக காத்திருக்கிறேன் என்று பதிலளித்தார்.

Poonam Bajwa Tweets About Ajiths Valimai Album

தல அஜித் நடிக்கும் இந்த படத்தை H.வினோத் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சார்பில் இந்த படத்தில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொரோனா பிரச்சனைகள் முடியும் வரை இந்த படம் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாது என்று கூறப்பட்டது.