ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர் பூஜா. நண்பன், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா உள்ளிட்ட படங்களில் நடித்து நடிப்பிலும் அசத்தினார் பூஜா ராமச்சந்திரன். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு நடிகர் ஜான் குக்கேன் என்பவரை திருமணம் செய்தார். 

pooja

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் காஞ்சனா 2 படத்தின் முக்கிய காட்சி உருவான விதம் குறித்து வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதில் காஞ்சனா 2 படம் சில நாட்களுக்கு முன் டிவியில் ஒளிபரப்பினார்கள். நடிகை டாப்ஸியுடன் இந்த படத்தில் மகிழ்ச்சியாக கழிந்தன. இந்த கடினமான சீன் படமாக்கும்போது கடுமையான வெப்பம் நிலவியது. மேலும் கண், காது மூக்கு எல்லாவற்றிலும் மண் புகுந்தது என்று பதிவு செய்துள்ளார். 

RaghavaLawrance

தமிழ் மொழி படங்கள் தவிர்த்து தெலுங்கிலும் பிஸியாக இருக்கிறார் பூஜா. கடைசியாக வெங்கடேஷ் நடித்த வெங்கி மாமா படத்திலும் எந்தா மன்சிவாடவுறா படத்திலும் நடித்திருந்தார். அட்லீ தயாரிப்பில் அந்தகாரம் படத்திலும் நடித்துள்ளார்.