தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்தெடுத்து நடிப்பவர் சிபிராஜ்.இவர் கடைசியாக சத்யா என்ற படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து ரங்கா,மாயோன்,வால்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Pooja Kumar Joins Cast of Sibiraj Kabadadhaari

ரங்கா படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து சைத்தான்,சத்யா படங்களை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் கடபதாரி படத்தில் நடித்து வருகிறார்.
நந்திதா ஸ்வேதா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

Pooja Kumar Joins Cast of Sibiraj Kabadadhaari

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது விஸ்வரூபம் படத்தில் ஹீரோயினாக நடித்த பூஜா குமார் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

Pooja Kumar Joins Cast of Sibiraj Kabadadhaari