விஸ்வரூபம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பூஜா குமார். அதனைத்தொடர்ந்து உத்தம வில்லன், விஸ்வரூபம் 2, பி.எஸ்.வி கருட வேகா போன்ற படங்களில் நடித்தார். இந்நிலையில் நடிகை பூஜா குமார், உலக நாயகன் கமல் ஹாசன் நடிக்கவிருக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் பரவியது. தற்போது இதுகுறித்து தெளிவு படுத்தியுள்ளார் நடிகை பூஜா குமார். கலாட்டா குழுவுடன் முகநூல் வாயிலாக லைவ்வில் தோன்றியவர், இச்செய்தி குறித்து பேசினார். 

Pooja Kumar Clarifies About Acting In Thalaivan Irukkindraan

தலைவன் இருக்கின்றான் படம் குறித்து இதுவரை படக்குழுவினர் என்னிடம் அணுகவில்லை. ஸ்கிரிப்ட் பணியில் தான் இருக்கிறார்கள். நடிகர் நடிகை குறித்த தகவல் ஏதும் இல்லை. ஸ்கிரிப்ட் முழுவதும் முடிந்த பின்னரே காஸ்டிங்கில் ஈடுபடுவார்கள். இப்போதைக்கு நான் படத்தில் இல்லை என்று கூறினார். இதனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் வரை ரசிகர்கள் காத்திருப்பது நல்லது. 

Pooja Kumar Clarifies About Acting In Thalaivan Irukkindraan

லைக்கா நிறுவனத்துடன் சேர்ந்து ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஒரு சில திரை விரும்பிகள் இப்படத்தை தேவர் மகன் 2 என்றும் கூறி வருகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் தான் எதையும் உறுதி செய்ய முடியும்.