மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா ஹீரோவாக நடித்த முகமூடி படம் மூலம் நடிகையானவர் பூஜா ஹெக்டே. அந்த படம் ஓடாவிட்டாலும் பூஜாவின் கெரியர் பாதிக்கப்படவில்லை. அவர் தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து ஆடிய புட்ட பொம்மா பாடல் வீடியோ பெரிய அளவில் ஹிட்டானது.  

ரசிகர்கள் கேட்டதுபோன்று தான் நீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் புகைப்படம், மேக்கப் இல்லா புகைப்படம், அல வைகுந்தபுரம்லோ செட்டில் எடுத்த புகைப்படம் ஆகியவற்றை பூஜா வெளியிட்டார். அப்பொழுது ஒரு விவகாரமான ஆளோ, உங்களின் நிர்வாண போட்டோவை வெளியிடுங்கள் என்றார். அதை பார்த்து பூஜா கோபப்படவில்லை. மாறாக தன் கால்களின் புகைப்படத்தை வெளியிட்டு நிர்வாண கால்கள் என கமெண்ட் போட்டு அந்த நெட்டிசனுக்கு நெத்தியடி தந்துள்ளார். 

இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பூஜா ஹெக்டேவின் பதில் பலரையும் கவர்ந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் சாட் செய்யும் நடிகைகளிடம் நிர்வாண புகைப்படம் அல்லது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுமாறு கேட்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. அண்மையில் இன்ஸ்டாகிராமில் சாட் செய்த லக்ஷ்மி மேனனிடம் ஒருவர் கவர்ச்சிப் புகைப்படம் கேட்டார். அதற்கு அவர் கடுப்பாகி எஃப் வார்த்தையை பயன்படுத்தினார்.

பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரின் ஹவுஸ்ஃபுல் 4 படத்தில் நடித்து அசத்திய பூஜா ஹெக்டே, இந்த ஆண்டு அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக அலா வைகுந்தபுரம்லோ என்ற படத்தில் நடித்து உலகளவில் பிரபலமானார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடல் யூடியூப்பில் சாதனைப் படைத்தது.

இப்போது பிரபாஸ் ஜோடியாக ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே இந்தியில், சல்மான் கான் ஜோடியாக, கபி ஈத் கபி தீவாளி என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுதவிர்த்து ரன்வீர் சிங் ஜோடியாக, ரோகித் ஷெட்டி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு சர்கஸ் என்று டைட்டில் வைத்துள்ளனர்.

pooja hegde replies to a fan who asked for her nude picture