தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்திகளில் ஒருவர் தளபதி விஜய்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடித்த மாஸ்டர் படம் கடந்த பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.கொரோனவை தொடர்ந்து வெளியான மாஸ்டர் படம் வசூலிலும் சாதனை படைத்தது.இதனை தொடர்ந்து தனது 65ஆவது படத்தில் நடித்து வந்தார் விஜய்.

 இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்,அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.யோகி பாபு,மலையாள நடிகர் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு Gerogia-வில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.கொரோனவால் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தள்ளிப்போனது.சில நாட்களுக்கு முன் படத்தின் டான்ஸ் Rehersal ஹைதராபாத்தில் தொடங்கியது.

தற்போது படத்தின் நாயகி பூஜா ஹெக்டே Beast படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள நேற்று மாலை  சென்னை கிளம்பியுள்ளார்.இந்த புகைப்படங்கள்,வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.பாடலுடன் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் 20 நாட்கள் நடைபெறும் என்ற தகவல் கிடைத்துள்ளது.