காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.
இதனை தொடர்ந்து ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகும் அருவா படத்தில் நடிக்கவுள்ளார்.

Pooja Hegde Clarifies On Acting In A Tamil Film

இந்த படத்தை ஹரி இயக்கவுள்ளார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விறுவிறுப்பான ஆக்ஷன் கலந்த குடும்பப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்தனர்.

Pooja Hegde Clarifies On Acting In A Tamil Film

இந்த படத்தின் ஹீரோயினாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.இதனை கவனித்த பூஜா தான் இன்னும் எந்த தமிழ் படமும் கமிட் ஆகவில்லை தற்போது கதை கேட்டுளேன்.கண்டிப்பாக இந்த வருடத்தில் ஒரு தமிழ் படம் பண்ணுவேன் என்று தெரிவித்துள்ளார்.தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து தெலுங்கு,ஹிந்தி என பிஸியான நடிகையாக மாறிவிட்டார்.இவர் விரைவில் தமிழில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.