பல மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தயாரிக்கப்படுகிறது இறக்குமதி செய்யப்பட்டும்  வருகிறது. பல லட்சம் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டு  வருகிறது. மருத்துவர்களும் செவிலியர்களும் முன்கள பணியாளர்களும் ஓய்வின்றி உறக்கமின்றி உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். முகக் கவசம், சானிடைசர், சமூக இடைவெளி,ஊரடங்கு என்ற பாதுகாப்பு  நடவடிக்கைகள் எத்தனை எத்தனை எடுத்தாலும் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் இன்னும் குறைந்தபாடில்லை.

மிதமான  நோய் தொற்று உள்ளவர்கள் மருத்துவமனையில் வந்து அனுமதிக்கப்பட தேவையில்லை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம் PULSE OXI மீட்டர் மூலமாக தங்களது ஆக்ஸிஜன் நிலைகளை கண்காணித்துக் கொண்டு வீட்டிலேயே தனிமைப்படுத்துவது மூலமும் மருத்துவரின் ஆலோசனையின்படி  நடப்பதன் மூலமும் நோய் தொற்றிலிருந்து விடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல சினிமா பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு குணமாகி வரும் சூழ்நிலையில் சில சினிமா பிரபலங்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு சென்று சிகிச்சை பலனின்றி உயிரிழப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  பிரபல தென்னிந்திய நடிகை பூஜா ஹெக்டே  15 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு மீண்டு வந்துள்ளார். 

நேற்று பூஜா ஹெக்டே தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பின்பற்றிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பற்றி கூறியுள்ளார். குறிப்பாக PULSE OXI மீட்டரை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை குறித்து ஒரு எளிய செயல்முறை விளக்கமும் அதில் கொடுத்துள்ளார். பூஜா ஹெக்டே வின் இந்த பதிவு மக்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதால் பூஜை ஹெக்டேவுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.