பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்பு அப்டேட் !
By Sakthi Priyan | Galatta | February 26, 2020 09:55 AM IST

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.
தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. பாகுபலி போல் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பன்னிரண்டு பாடல்கள் இருக்கக்கூடும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். வரலாற்று சிறப்புமிக்க இந்த படைப்பிற்காக மிகுந்த ஆவலில் காத்திருக்கின்றனர் திரை விரும்பிகள்.
சமீபத்தில் பாலிவுட் பிரபலம் சோபிதா துளிப்பாலா இணைந்தார். சென்னை பாண்டிச்சேரியில் நடந்த படப்பிடிப்பிற்கு பிறகு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு விரைந்தனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது என நடிகர் ரியாஸ் கான் பதிவு செய்தார்.
Karisma Kapoor is back | Mentalhood official trailer!
26/02/2020 11:00 AM
Mani Ratnam's Ponniyin Selvan second schedule wrapped up! Check Out!
26/02/2020 10:42 AM
New James Bond movie - No Time To Die making video | Daniel Craig
26/02/2020 10:19 AM
Breaking details on Thalapathy Vijay's Master audio launch
25/02/2020 07:46 PM