உலகளவில் வசூல் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன் !
By Aravind Selvam | Galatta | October 19, 2022 11:28 AM IST

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.தனது படங்கள் மூலம் இந்திய சினிமாவை திரும்பிப்பார்க்க வைக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த செக்க சிவந்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தினை இயக்கியுள்ளார் மணி ரத்னம்.இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது.சீயான் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ்,சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
உலகம் முழுவதும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் வசூலில் சாதனை படைத்துள்ளது.இந்த படத்தினை பல பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.இன்னும் பல கோடிகளை இந்த படம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் உலகளவில் 450 கோடிகளை கடந்து சாதனை படைத்துள்ளது என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்
History in the making 🐯🔥#PS1 🗡️ hits a staggering 450+ crores at the box office ✨
— Lyca Productions (@LycaProductions) October 19, 2022
Thank you for all the love and support!#PonniyinSelvan1 🗡️ #ManiRatnam @arrahman @MadrasTalkies_ @LycaProductions @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/XXAApSo2Ij