புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மிகப்பிரமாண்டமாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம், அருள்மொழிவர்மன் எனும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி, நந்தினி மற்றும் ஊமை ராணி எனும் இரட்டை வேடங்களில் ஐஸ்வர்யாராய், குந்தவையாக த்ரிஷா, சுந்தரசோழராக பிரகாஷ்ராஜ், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சிறிய பழுவேட்டரையராக பார்த்திபன், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, பூதி விக்ரம கேசரி கதாபாத்திரத்தில் பிரபு ஆகியோர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

தோட்டாதரணி கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. 

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடலாக பொன்னி நதி பாடல் தற்போது வெளியானது. பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ள பொன்னி நதி பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ளார். அட்டகாசமான அந்தப் பாடல் இதோ…