பொன்னியின் செல்வன் முதல் பாடல் பாடகர்,பாடலாசிரியர் குறித்த தகவல் !
By Aravind Selvam | Galatta | July 30, 2022 14:22 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.தனது படங்கள் மூலம் இந்திய சினிமாவை திரும்பிப்பார்க்க வைக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த செக்க சிவந்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தினை இயக்கியுள்ளார் மணி ரத்னம்.இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது.சீயான் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ்,சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 2022-ல் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்த படத்தின் டீஸர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் ஜூலை 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த பாடலை ஏ ஆர் ரஹ்மான் பாடியுள்ளார்.இளங்கோ கிருஷ்ணன் இந்த பாடலை எழுதியுள்ளார்.இந்த பாடல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள EA மாலில் நடைபெறவுள்ளது இதில் ஜெயம்ரவி,கார்த்தி உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
Join us to celebrate the launch of #PonniNadhi at 6pm tomorrow at Express Avenue Mall, Chennai! #PS1FirstSingle ⚔️🎶#ManiRatnam #ARRahman @karthi_offl @actor_jayamravi #Jayaram#PS1 #PonniyinSelvan @LycaProductions @arrahman @tipsofficial @tipsmusicsouth @primevideoin pic.twitter.com/vRDbhonDg5
— Madras Talkies (@MadrasTalkies_) July 30, 2022