ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கும் திரைப்படமாக தயாராகி வருகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக ஆதித்த கரிகாலனாக சீயான் விக்ரம், அருள்மொழிவர்மன் எனும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, வல்லவரையன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி, நந்தினி மற்றும் ஊமை ராணி எனும் இரட்டை வேடங்களில் ஐஸ்வர்யாராய், குந்தவையாக த்ரிஷா, சுந்தரசோழராக பிரகாஷ்ராஜ், ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சிறிய பழுவேட்டரையராக பார்த்திபன், பூங்குழலியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, பூதி விக்ரம கேசரி கதாபாத்திரத்தில் பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்யும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடல் வெகு விரைவில் வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டூடியோவில் முதல் பாடல் உருவாகும் மேக்கிங் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ இதோ…
 

First Single Coming Soon!https://t.co/uiGm1fkJBr#PS1 releasing in theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada! #PonniyinSelvan@LycaProductions #ManiRatnam @arrahman @Tipsofficial pic.twitter.com/HbBOz1Wy6v

— Madras Talkies (@MadrasTalkies_) July 25, 2022