நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு புகழ்பெற்ற எழுத்தாளர் அமரர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக மிகுந்த சிரத்தையோடு செதுக்கி இருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். எழுத்தாளர் ஜெயமோகனின் வசனத்தில் இரண்டு பாகங்களாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பொன்னியின் செல்வனின் முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், இளையதிலகம் பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நிழல்கள் ரவி, ஷோபிதா, லால், அஷ்வின் காக்கமனு, ஜெயசித்ரா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தோட்டா தரணியின் கலை இயக்கத்தின் பிரம்மாண்டமும், ரவிவர்மனின் ஒளிப்பதிவின் பிரமிப்பும், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் பொன்னியின் செல்வனை உயர்த்திப் பிடிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் மாயாஜாலம் காட்டியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகமும் அடுத்த 6-9 மாதங்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிப்பீட் மோடில் ரசிகர்கள் கொண்டாடி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலில் புதிய புதிய சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான 2.O படத்தின் மொத்த வசூலை முறியடித்து, பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது அமெரிக்காவில் அதிக வசூல் செய்த தமிழ்  படமாக முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#PonniyinSelvan conquered USA & continuous its dream run at the box-office🤙🏾🔥

Became 𝗔𝗹𝗹 𝗧𝗶𝗺𝗲 𝗛𝗶𝗴𝗵𝗲𝘀𝘁 𝗞𝗼𝗹𝗹𝘆𝘄𝗼𝗼𝗱 𝗚𝗿𝗼𝘀𝘀𝗲𝗿 in USA💥💥#PS1 🇺🇸release by @sarigamacinemas#ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tentkotta @kalraman2016 pic.twitter.com/sUlUFSdYw0

— Sarigama Cinemas (@sarigamacinemas) October 9, 2022