“இப்படி வைரலாகும்னு நினைக்கல” – காதல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பொன்னியின் செல்வன் பூங்குழலி .. வைரலாகும் பதிவு இதோ..

அர்ஜுன் தாஸ் உடனான் காதல் வதந்திக்கு ஐஸ்வர்யா லக்ஷ்மி  முற்றுப்புள்ளி - Aishwarya lakshmi confirms relationship with arjun das | Galatta

மலையாள திரையுலக நடிகையான  ஐஸ்வர்யா லக்ஷ்மி, விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அக்ஷன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஜகமே தந்திரம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கிடையே பிரபலமானார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. அதனை தொடர்ந்து இந்தியாவின் தலை சிறந்த இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் வரும் ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பூங்குழலி கதாபாத்திரம் மூலம் பரவலாக பேசப்பட்டார் ஐஸ்வர்யா லக்ஷ்மி.

மலையாளம் திரையுலகில் ஏற்கனவே பிரபலமடைந்த அவர் அதனை தொடர்ந்து தமிழிலும் பிரபலமானார். இந்நிலையில் கடந்த ஆண்டு அவர் நடிப்பில்  தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளில் 9 படங்கள் வெளியாகின, மேலும் ஆண்டின் இறுதியில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்திலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கைதி, மாஸ்டர், விக்ரம், அந்தகாரம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் உடனான புகைப்படத்தை ஹார்ட் எமொஜியுடன் பகிர்ந்தார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. இதனையடுத்து அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லக்ஷ்மி  ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து தொடர்ந்து அந்த பதிவின் கீழ் கமெண்ட்டுகளை பதிவிட்டு வந்தனர். இருவரும் காதலித்து வருகிறீர்களா? என்றும் புது படத்தின் அறிவிப்பா? என்ற கேள்விகளே அதிகமாய் இருந்து வைரலானது. இதனையடுத்து  

ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “என்னுடைய முந்தைய பதிவு இந்தளவு வைரலாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நானும் அர்ஜுன் தாஸும் சந்திக்க நேர்ந்தது. அப்போது தான் அந்த புகைப்படம் எடுத்தேன். இதில் வேறெதுவும் இல்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள். நேற்றிலிருந்து எனக்கு மெசேஜ் அனுப்பும் அர்ஜுன் தாஸ் ரசிகர்களே கொஞ்சம் ஓய்வெடுங்கள். அவர் உங்களுடையவர் தான்.” என்று  பதிவிட்டுள்ளார். இதனையடுத்து இந்த பதில் பதிவும் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

special movies in television for this pongal holiday

நடிகர் அர்ஜுன் தாஸ் கைதி படத்தின் மூலம் அதிகம் கவனம் பெற்றார். மிரட்டலான குரலுடன் திரையில் தோன்றினாலே திரையரங்கம் அதிரும் அளவு சீக்கிரமே  ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விட்டார். அதன் பின் அந்தகாரம் படத்தில் கதாநாயக நடித்தார்  மாஸ்டர், விக்ரம் படத்தில் துணை நடிகராக  நடித்தார். மேலும் தொடர்ந்து இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அநீதி படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார், மற்றும் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் இணைந்துள்ள தளபதி 67 கூட்டணியிலும் இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது

“படப்பிடிப்பில் இதனால் தான் ஷ்யாம் என்னை திட்டினார் “ - வாரிசு பட நடிகை சம்யுக்தா..  முழு வீடியோ இதோ
சினிமா

“படப்பிடிப்பில் இதனால் தான் ஷ்யாம் என்னை திட்டினார் “ - வாரிசு பட நடிகை சம்யுக்தா.. முழு வீடியோ இதோ

அஜித்தின் துணிவு பட வாய்ப்பை நழுவ விட்ட வாரிசு பட நடிகை – சுவாரஸ்யமான தகவல் இதோ ..
சினிமா

அஜித்தின் துணிவு பட வாய்ப்பை நழுவ விட்ட வாரிசு பட நடிகை – சுவாரஸ்யமான தகவல் இதோ ..

துணிவு படத்தின் Bank Set – சுவாரஸ்யமான ரகசியங்களை போட்டுடைத்த எச்.வினோத்.. முழு வீடியோ இதோ..
சினிமா

துணிவு படத்தின் Bank Set – சுவாரஸ்யமான ரகசியங்களை போட்டுடைத்த எச்.வினோத்.. முழு வீடியோ இதோ..