பொன்னியின் செல்வன் 2 பட அட்டகாசமான சர்ப்ரைஸ்... மனதை மயக்கும் சின்னஞ்சிறு நிலவே வீடியோ பாடல் இதோ!

பொன்னியின் செல்வன் 2 பட சின்னஞ்சிறு நிலவே வீடியோ பாடல்,Ponniyin selvan 2 movie chinnanjiru nilave video song mani ratnam | Galatta

எதிர்பாராத நேரத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலிருந்து சின்னஞ்சிறு நிலவே வீடியோ பாடலை பட குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். அமரர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை  2 பாகங்கள் கொண்ட படமாக திரை வடிவமாக இயக்குனர் மணிரத்னம் மாற்றி இருக்கிறார். இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வனை உருவாக்க, திரைக்கதையில் ஏகப்பட்ட சவால்கள் இருக்கும் அவை அனைத்தையும் மிகச் சரியாக கையாள இயக்குனர் மணிரத்னம் உடன் கைகோர்த்து எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் இருவரும் திரைக்கதை வசனங்களில் பணியாற்றினர். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க இரண்டு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு தோட்டா தரணியின் கலை இயக்கத்தில், ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.

பொன்னியின் செல்வன் நாவலின் மிக முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பல வாசகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் கடந்த ஆண்டில் வெளிவந்து 500 கோடி ரூபாய் வரை வசூலித்த நிலையில், பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் அதற்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவிலேயே 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனைகள் படைத்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு புதிய சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திலிருந்து சின்னஞ்சிறு நிலவே வீடியோ பாடலை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர். பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் தொடக்கத்தில் மிக முக்கிய பாகமாக அமைந்த ஆதித்த கரிகாலன் - நந்தினி கதாபாத்திரங்களின் பின்னணியை அழகிய பாடல் வடிவில் மணிரத்னம் வழங்கி இருப்பார். இளம் வயதில் ஆதித்த கரிகாலன் - நந்தினி கதாப்பாத்திரங்களின் அறிமுகமும் அதில் மலர்ந்த காதலும் பின் பிரிந்த சோகமும் என மக்களின் மனதை மிக ஆழமாக பாதித்த அந்த சின்னஞ்சிறு நிலவே வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

ஜூன் ரேசில் இணைந்த SJசூர்யாவின் மிரட்டலான திரைப்படம்... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!
சினிமா

ஜூன் ரேசில் இணைந்த SJசூர்யாவின் மிரட்டலான திரைப்படம்... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ!

சினிமா

"தியேட்டர்ல சந்திப்போம்!" சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படப்பிடிப்பு நிறைவு... அட்டகாசமான SHOOTING SPOT GLIMPSE இதோ!

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் எத்தனை பாடல்கள்?- இசை வெளியீட்டிற்கு முன் முழு பட்டியலை வெளியிட்ட ARரஹ்மான்!
சினிமா

உதயநிதி ஸ்டாலின் - மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தில் எத்தனை பாடல்கள்?- இசை வெளியீட்டிற்கு முன் முழு பட்டியலை வெளியிட்ட ARரஹ்மான்!