சூர்யாவின் 2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இதில் பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என நட்சத்திர பட்டாளமே உண்டு. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடந்து முடிந்தது. 

ponmagalvandhaal

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகியது. இந்த படத்தில் நடிகை ஜோதிகா வக்கீலாக நடிக்கிறார். தற்போது படத்தின் வா செல்லம் லிரிக் வீடியோ வெளியானது. 

jyothika

பிருந்தா சிவகுமார் பாடிய இந்த பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ளார். இன்று பிருந்தா சிவகுமாரின் பிறந்தநாள் என்பதால் இந்த பாடலை வெளியிட்டு அசத்தியுள்ளனர் படக்குழுவினர். வரும் மார்ச் 27-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.