சூர்யாவின் 2டி  எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். ஜே.ஜே. ப்ரட்ரிக் இயக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இதில் பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என நட்சத்திர பட்டாளமே உண்டு. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஊட்டியில் நடந்து முடிந்தது. 

Jyothika

படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ஈர்த்தது. இந்த படத்தில் நடிகை ஜோதிகா வக்கீலாக நடிக்கிறார். சமீபத்தில் படத்தின் முதல் சிங்கிள் வா செல்லம் லிரிக் வீடியோ வெளியானது. பிருந்தா சிவகுமார் பாடிய இந்த பாடல் வரிகளை விவேக் எழுதியிருந்தார். 

ponmagalvandhaal

மார்ச் 27-ம் தேதி வெளியாகவிருந்த இப்படம் கொரோனா வைரஸ் பாதிப்பால் வேறு தேதிக்கு மாற்றப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தற்போது இரண்டாம் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்ற ருசிகர தகவல் தெரியவந்தது.