நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தினை தொடர்ந்து ரியோ ஹீரோவாக நடித்து வரும் படம் பிளான் பண்ணி பண்ணனும்.இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு  இசையமைத்துள்ளார்.

Plan Panni Pannanum TrackList Released Yuvan

இந்த படத்தை பாசிட்டிவ் ப்ரிண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.பாலசரவணன்,முனீஷ்காந்த்,ரோபோ ஷங்கர்,ஆடுகளம் நரேன்,விஜி சந்திரசேகர்,சந்தான பாரதி,எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Plan Panni Pannanum TrackList Released Yuvan

இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா வரும் மார்ச் 11ஆம் தேதி வெளிவரவுள்ளது.இதனை சிவகார்த்திகேயன் வெளியிடவுள்ளார்.தற்போது இந்த படத்தின் ட்ராக்லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.