பிளான் பண்ணி பண்ணனும் பட ஆடியோ உரிமையை கைப்பற்றிய சோனி நிறுவனம் !
By Aravind Selvam | Galatta | February 13, 2020 16:57 PM IST
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியை துவங்கி தற்போது ஹீரோவாக உருவெடுத்து நிற்பவர் ரியோ ராஜ்.சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து பத்ரி வெங்கடேஷ் இயக்கும் பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் ரியோ ஹீரோவாக நடித்துள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தை பாசிட்டிவ் ப்ரிண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.ரம்யா நம்பீசன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
பாலசரவணன்,முனீஷ்காந்த்,ரோபோ ஷங்கர்,ஆடுகளம் நரேன்,விஜி சந்திரசேகர்,சந்தான பாரதி,எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின்பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Makkale! We are electrified🤩 to announce that @SonyMusicSouth has bagged the audio rights of #PlanPanniPannanum 🥳#YuvanBadri3 @rio_raj @dirbadri @SinthanL @thisisysr @nambessan_ramya @karnamurthyac @Rajeshnvc5Kumar @RogerSatinwhite pic.twitter.com/SnAeaSPSAD
— Positive Print Studios (@positiveprint_) February 12, 2020
Official: Sid Sriram lends his voice for a song in Pink Telugu remake - PSPK 26
13/02/2020 04:31 PM
2 minute video from Soorarai Pottru Veyyon Solli
13/02/2020 03:00 PM
The Iron Mask Trailer - Jackie Chan vs Arnold Schwarzenegger!
13/02/2020 01:20 PM