பிசாசு 2 படத்தின் எமோஷனலான முதல் பாடல் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | October 02, 2021 13:24 PM IST

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த ஹாரர் திரில்லர் திரைப்படம் பிசாசு.இந்த படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
பிசாசு 2 படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ராக்போர்ட் எண்டெர்டைன்மெண்ட் தயாரித்துள்ளனர்.இந்த படத்தினையும் இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ளார்.இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.ஆண்ட்ரியா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
பூர்ணா,சந்தோஷ் பிரதாப்,நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.கார்த்திக் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்த படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.உறவின் பாட்டு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்