தளபதி விஜயின் அதிரடியான லியோ பட வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய சர்வதேச நிறுவனம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

தளபதி விஜயின் லியோ பட வெளிநாட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்,phars film bagged overseas release rights of vijay in leo movie | Galatta

எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் பற்றி சர்வதேச நிறுவனம் கைப்பற்றியதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகி உள்ளது. தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்யத்தை தளபதி விஜய் அடுத்ததாக தனது திரைப்பயணத்தில் 68 வது படமாக நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். பிகில் படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜயுடன் கைகோர்க்கும் ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மேலும் தளபயி68 திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக தற்போது தனது திரைப் பயணத்தில் 67-வது திரைப்படமாக தயாராகும் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணி இணைந்து இருப்பதாலும், கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - உலகநாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இமாலய வெற்றி பெற்றதாலும் லியோ திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இதுபோக தனது விக்ரம் மற்றும் கைதி ஆகிய திரைப்படங்களில் இருந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருக்கும் LCU யுனிவர்ஸ் இன்னும் பெரிய எதிர்பார்ப்புகளை கூட்டி இருக்கிறது. இந்த யுனிவர்ஸில் தளபதி விஜயின் லியோ படமும் இடம்பெருமா என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். 

லியோ படத்தில் தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் லியோ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த கட்டமாக தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக லியோ திரைப்படத்தின் ரிலீஸுக்காக மிகப்பிரமாண்டமான திட்டங்கள் இருப்பதாக தயாரிப்பாளர் SS.லலித்க்குமார் அவர்கள் தெரிவித்திருந்தார். கிட்டத்தட்ட 3000 மையங்கள் இருக்கும் அமெரிக்காவில் 1500 மையங்களில் லியோ திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் PHARS FILM Co LLC நிறுவனம் ரியோ திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமத்தை கைப்பற்றி இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ…
 

Hold on to your seats as @PharsFilm is all set to deliver our prestigious movie #LEO overseas 🔥

Happy to be associated with Phars Film for the overseas release#LEOwithPharsFilm #LeoFilm #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjaypic.twitter.com/SporeSi8Dz

— Seven Screen Studio (@7screenstudio) June 3, 2023

மாரி செல்வராஜின் மாமன்னன் பட புது சர்ப்ரைஸ்... உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷின் ரொமான்டிக்கான நெஞ்சமே நெஞ்சமே பாடல் இதோ!
சினிமா

மாரி செல்வராஜின் மாமன்னன் பட புது சர்ப்ரைஸ்... உதயநிதி ஸ்டாலின் - கீர்த்தி சுரேஷின் ரொமான்டிக்கான நெஞ்சமே நெஞ்சமே பாடல் இதோ!

சினிமா

"மாமன்னன் படத்தின் ரிலீஸ் எப்போது?"- திட்டமிட்டிருக்கும் தேதியை பகிர்ந்த உதயநிதி ஸ்டாலின்! வைரல் வீடியோ

ஆர்யாவின் ACTION PACKED காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... கவனத்தை ஈர்க்கும் அசத்தலான SNEAK PEEK வீடியோ இதோ!
சினிமா

ஆர்யாவின் ACTION PACKED காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்... கவனத்தை ஈர்க்கும் அசத்தலான SNEAK PEEK வீடியோ இதோ!