நாடு முழுதும் கொரோனா நோய் வேகமாக பரவி வருகிறது. அதன் பரவலை தடுக்க வரும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டுமே வெளியே வருகின்றனர். உணவின்றி தவிக்கும் ஏழை எளியோருக்கு பல பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். 

People Gathered Infront Of Ragava Lawrence House

அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தன்னால் முடிந்த உதவியை ஆரம்பத்திலிருந்து செய்து வருகிறார். தற்போது ஒரு வீடியோவை பதிவிட்டு தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில் இன்று காலை எனது வீட்டிற்கு முன்பு திடிரென்று 20 பேர் கூடி விட்டனர். விசாரித்ததில் அவர்கள் விஜயவாடா, ராஜமந்திரி போன்ற இடங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் என்றும், தற்போது கொரோனா காரணமாக சரியான உணவு இருப்பிடம் இல்லாமல் தவித்து வருவதாகவும், தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் கஷ்டப்படுவதாகவும் கூறுகின்றனர். அவர்களுக்கு அடுத்த 15 நாட்களுக்கு தேவையான உணவு ஏற்பாடுகளை நான் கவனித்து கொள்கிறேன்.

People Gathered Infront Of Ragava Lawrence House

அரசாங்கத்திடம் முன் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் அவர்கள் தங்களது வீடுகளுக்குச் சென்று சேர போக்குவரத்து உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இதில் கவனம் செலுத்தி உதவி செய்ய வேண்டும் என்றும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.