காஃபி, புத்தகம், கிட்டார், அழகான குடும்பம், அன்பான வார்த்தைகள், அண்ணா நகர் நண்பர்கள், லாஜிக்கான ஹீரோயிசம், உணர்வுபூர்வ உரையாடல், மைன்ட் வாய்ஸ் வசனங்கள் மற்றும் ஸ்டஃப்ஸ் இவையனைத்தும் ஓர் படத்தில் கொண்டு வர கௌதம் மேனனால் மட்டுமே முடியும் என்பதை தன் ஒவ்வொரு படங்களின் மூலம் நிரூபிக்கிறார். 

இந்த லாக்டவுனிலும் பிஸியாக காணப்படும் கெளதம் மேனன், ஒன்றாக என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில் கார்த்திக் டயல் செய்த எண் குறும்படம், ஒரு ஒரு சான்ஸ் குடு பாடல் ஆகியவற்றை இயக்கினார். கிளாஸ் நிறைந்த இந்த இரண்டு படைப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. 

ஒன்றாக என்டர்டெயின்மென்ட் தயாரித்த இந்த பாடலில் ஷாந்தனு பாக்கியராஜ், கலையரசன் மற்றும் மேகா ஆகாஷ் நடித்திருந்தனர். கார்த்திக் குரலில் ஒலிக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியுள்ளார். நடன அமைப்பாளர் சதிஷ் கிருஷ்ணன் இந்த பாடலுக்கு கோரியோகிராஃப் செய்திருந்தார். ரசிகர்களை தாண்டி திரைப்பிரபலங்களையும் ஈர்த்தது இந்த பாடல்.

லெஜெண்ட்ரி ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுடன் வெப்சீரிஸ் ஒன்றில் இணைந்துள்ளார் கெளதம் மேனன்.  அமேசான் நிறுவனம் தயாரிக்கும் புதிய வெப்சீரிஸின் ஷூட்டிங்கை துவங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தை ஈர்த்து வருகிறது. 

கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜோஷ்வா இமை போல் காக்க. வருண் மற்றும் ராஹேய் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸும் தள்ளிவைக்கப்பட்டது.