மறைந்த மலையாள சினிமாவின் சிறந்த திரைக்கதை ஆசிரியரும் இயக்குனருமான சச்சி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஐயப்பனும் கோஷியும். மலையாள திரை உலகின் முன்னணி நடிகர்களான பிஜு மேனன் மற்றும் பிரித்திவிராஜ் இணைந்து நடித்த ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் தென்னிந்திய அளவில் மெகா ஹிட்டானது.

இதன் தொடர்ச்சியாக தற்போது ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக் பீம்லா நாயக் தயாராகி வருகிறது. பிஜு மேனன் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் பீம்லா நாயக் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர் ராணா டகுபதி, பிரித்திவிராஜ் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் நடிகைகள் நித்யா மேனன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் பீம்லா நாயக் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.பிரபலத் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கின் புதிய பாடல் வெளியானது.

தென்னிந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான S.தமன் இசையில் உருவாகியிருக்கும் பீம்லா நாயக் டைட்டில் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பவர் ஸ்டார் பவன் கல்யாண் இன் அதிரடியான பீம்லா நாயக் டைட்டில் பாடலை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.