விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வெற்றிகரமான தொடர்களில் ஒன்று குக் வித் கோமாளி.இந்த தொடரின் இரண்டாவது சீசனில் பிரபல மாடலும் நடிகையுமான பவித்ரா லக்ஷ்மி பபங்கேற்று அசத்தியிருந்தார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பவித்ரா.குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக அவதரித்தார் பவித்ரா.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் சில குறும்படங்கள்,ஆல்பம் பாடல்கள் போன்றவற்றில் நடித்திருந்தார் பவித்ரா.மேலும் உல்லாசம் என்ற மலையாள படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.உங்களில் யார் பிரபுதேவா நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்று அசத்தியிருந்தார்.மேலும் மிஸ் மெட்ராஸ் போன்ற சில பட்டங்களையும் வென்று அசத்தியுள்ளார் பவித்ரா.

தமிழில் ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் நாய் சேகர்,கதிர் நடிக்கும் யுகி என சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் பவித்ரா.நாய் சேகர் படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இவர் நடித்த சில ஆல்பம் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தன.

இவர் முதல் முதலில் ஹீரோயினாக நடித்திருந்த உல்லாசம் என்ற மலையாள பட ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது.தற்போது இந்த படம் வரும் பிப்ரவரி 2022-ல் வெளியாகும் என்ற மகிழ்ச்சியான செய்தியை பவித்ரா ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.