தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.கடைசியாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமாருடன் அயலான்,கோலமாவு கோகிலா இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் டாக்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.இந்த இரண்டு படங்களின் பர்ஸ்ட்லுக்கும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங்கையுமே சமீபத்தில் முடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.இவர் நடிக்கும் அடுத்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்குகிறார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்திற்கு டான் என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் அறிவிப்பு மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த படத்தில் ஹீரோயினாக டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் நடிக்கிறார்.எஸ்.ஜே.சூர்யா,சமுத்திரக்கனி,சூரி,முனீஸ்காந்த்,காளி வெங்கட்,பாலா சரவணன்,RJ விஜய்,சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.இந்த படத்தின் குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான புகழ் நடித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன.இது குறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை.

இருந்தாலும் டான் படப்பிடிப்பு தளத்தில் புகழ் இருப்பது போல சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தன.இன்றைய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ரா புகழ் படத்தில் நடிக்கும் விஷயத்தை உறுதிசெய்யும் வகையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசிய நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். புகழ் ஹீரோயினிடம் வம்பு இழுப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார் என்று பவித்ரா கூறியுள்ளார்