வெற்றிகரமாக இரண்டு வாரங்களை கடந்து 3-வது வாரத்தில் பரபரப்பாக நகர்கிறது விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5. முதல் வாரத்தில் தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா மாரிமுத்து வெளியேற, கடந்த வார இறுதியில் நாடியா சாங் எலிமினேட் செய்யப்பட்டார்.

இதனையடுத்து தற்போது 3-வது வாரத்தில் சிபி பிக் பாஸ் வீட்டில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வார எலிமினேஷனுக்கான நாமினேஷனில் அபிஷேக், பாவனி, பிரியங்கா, ஐக்கி பெர்ரி, இசைவாணி, சின்னபொண்ணு, அபினய், அக்ஷரா மற்றும் தாமரை செல்வி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

மேலும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் லக்சரி பட்ஜெட் டாஸ்க் நேற்று (அக்டோபர் 19) தொடங்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களையோ அல்லது தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களையோ தக்கவைத்துக் கொள்வதற்காக பரபரப்பாக இந்த டாஸ்க்கில் விளையாடி வருகிறார்கள்.

அந்த வகையில் இன்றைய (அக்டோபர் 20) நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோக்கள் இன்று வெளியாகின. முன்னதாக வெளியான ப்ரோமோ வீடியோக்களில் அபிஷேக்குக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், தற்போது அபினய்க்கு எதிராக ஆவேசத்தோடு சில குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார் பாவனி. அதிரடியான இந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணுங்கள்.