நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் VJ அஞ்சனா. தொலைக்காட்சியில் ரசிகர்களுடன் உரையாடி பாடல்களை தொகுத்து வழங்கும் பணியை சிறப்பாக செய்தவர். தொலைக்காட்சிக்கு ரெஸ்ட் அளித்தாலும் இவரது ரசிகர்கள் இவரை விடவில்லை. சில வருடங்களுக்கு முன் நடிகர் சந்திரமௌலியை திருமணம் செய்தார். இந்த அழகான தம்பதிக்கு ருத்ராக்ஷ் என்ற மகன் உள்ளார். இந்த ஊரடங்கில் கொரோனா வைரஸ் போல் வேகமாக பரவுவது அஞ்சனாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகளும், அவர் வெளியிடும் புகைப்படங்களும் தான். 

அஞ்சனாவின் கணவர் சந்திரமௌலி, கடந்த 2014-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் ஹீரோவோக கால்பதித்தவர் ரூபாய், திட்டம் போட்டு திருடுற கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. 

இந்த கொரோனா ஊரடங்கில் பல திரைப்பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் கணவரின் சமையல் குறித்து பதிவு ஒன்றை செய்துள்ளார். அவரது பதிவில், இசை இல்லாம வேலை பார்க்க மாட்டாராம் என்றும், சேப்பக்கிழங்கு வறுவல் செய்வதில் வல்லவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். இதைக்கண்ட பல ரசிகர்கள், அநேகமாக அநேகமாக அஞ்சனாவின் ஃபேவரைட் சைட்டிஷ் இதுவாக கூட இருக்கலாம் என்று யூகித்து வருகின்றனர். 

சமீபத்தில் தளபதி விஜய் பிறந்தநாளில் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறினார் அஞ்சனா. இந்த லாக்டவுனில் உடற்பயிற்சி, செல்ல மகனுடன் விளையாட்டு, போட்டோஷூட் என பட்டையை கிளப்பி வருகிறார்.