தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் ஒருவரான தளபதி விஜய் அவர்கள் தற்போது தனது துணை பயணத்தில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களின் ஒருவராக ஜொலிக்கும் தளபதி விஜய்க்கு பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் இயக்குனர் வம்சை இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் வாரிசு. ஸ்ரீ வெங்கடேஷ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் வாரிசு திரைப்படம் வருகிற பொங்கல் வெளியீடாக அடுத்த ஆண்டு(2022) ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அடுத்ததாக மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படம் ரசிகர்களிடைய எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று டிசம்பர் 5ஆம் தேதி தளபதி 67 திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ள நிலையி்ல்  அடுத்தடுத்து வரும் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் தளபதி விஜய் தனது திரைப்பயணத்தில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை வாழ்த்தும் வகையில் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு,”மூப்பது முட்டாத முப்பது-இனி தோற்பது கிட்டாத ரசிகர்களின் தோப்பது! நண்பர் தளபதி விஜய் அவர்களின் இன்னும் முப்பதும் கடக்கும் இன்னொரு வாரிசே இல்லாத இமாலய வெற்றிக்கு வாழ்த்துகள்!” என் தெரிவித்துள்ளார். பார்த்திபன் அவர்களின் அந்த பதிவு இதோ…

 

மூப்பது முட்டாத முப்பது-இனி
தோற்பது கிட்டாத ரசிகர்களின் தோப்பது!
நண்பர் தளபதி விஜய் அவர்களின் இன்னும் முப்பதும் கடக்கும் இன்னொரு வாரிசே இல்லாத இமாலய வெற்றிக்கு வாழ்த்துகள்! pic.twitter.com/WeLGswYMLw

— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 6, 2022