தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர் பட்டியலில் ஒருவர் பா ரஞ்சித். அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கபாலி, காலா என இரண்டு படங்களை இயக்கினார். தற்போது ஆர்யா வைத்து சல்பேட்டா படத்தை இயக்கிவருகிறார். 

Ranjith

வடசென்னை பகுதியில் பாக்ஸிங் விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஆர்யாவின் ஜிம்  ஒர்க்-அவுட் வீடியோ வெளியாகி வைரலானது. இந்த படத்தில் கலையரசன், தினேஷ், துஷாரா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

ranjith

இந்நிலையில் பா. ரஞ்சித்திற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது என்ற ருசிகர செய்தி கலாட்டா செவிகளுக்கு எட்டியது. குழந்தைக்கு மிளிரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.