அசுரன் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து அமோக வரவேற்பை பெற்றது. தற்போது அசுரன் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது என தகவல் தெரியவந்தது.தற்போது இப்படம் குறித்து பாராட்டி கூறியுள்ளார் இயக்குனர் ரஞ்சித்.

dhanush

தமிழ்த்திரையில் அசுரன் கதையை நிகழ்த்தி காட்டிய இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தன் நடிப்பால் அசுரத்தனம் காட்டிருக்கும் தனுஷ் நம்பிக்கையுடன் தயாரித்த கலைப்புலி தாணு மற்றும் இத்திரைப்பட குழுவினர்களுக்கு மனமகிழ்ந்த நன்றிகள். உரக்க சொல்லுவோம், நிலமே எங்கள் உரிமை என்று ரஞ்சித் பதிவு செய்துள்ளார்.

ranjith

தமிழ் சினிமாவின் பல வெற்றி படைப்புகள் தந்த வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார். கலைப்புலி S தாணு இப்படத்தை தயாரித்துள்ளார். பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களுக்கு பிறகு இந்த படமும் தனி சிறப்பை பெற்றது.

dhanush

PaRanjith

தனுஷ் இரண்டு கெட்டப்பில் நடித்த இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார் மேலும் நடிகர் கென் கருணாஸ், அம்மு அபிராமி, டீ.ஜே ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தனர் என்பது நாம் அறிந்தவையே. படத்தின் பாடல் வீடியோ மற்றும் மேக்கிங் வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி அசத்தி வருகிறது.