தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்திலும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சரத்குமார். அந்தவகையில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லன் மற்றும் மிக முக்கிய வேடங்களில் என சரத்குமார் நடித்துள்ள திரைப்படங்கள் அடுத்தடுத்து வரிசையாக வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பெரிய பழுவேட்டரையர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சரத்குமார், அடுத்து தளபதி விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் லாரன்ஸின் ருத்ரன், விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன், அதர்வாவின் நிறங்கள் மூன்று ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகர் சரத்குமார், ஆழி & தி ஸ்மைல் மேன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த வரிசையில் இயக்குனர் C.அரவிந்தராஜ் இயக்கத்தில் அமிதாஷ் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பரம்பொருள்.

S.பாண்டி குமார் ஒளிப்பதிவில், நாகூரான் படத்தொகுப்பு செய்யும் பரம்பொருள் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில் பரம்பொருள் திரைப்படத்தின் முதல் பாடலாக சிப்பர ரிப்பர எனும் பாடல் வருகிற ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் கலக்கலான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…