தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் த்ரிஷா. அறிமுக இயக்குனர் திருஞானம் இயக்கத்தில் பரமபதம் விளையாட்டு எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. த்ரிஷாவின் 60-வது படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு உள்ளது. 

trisha trisha

பொலிடிக்கல் திரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், அம்மா பொண்ணுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. த்ரிஷாவுடன் ரிச்சர்டு மற்றும் நந்தா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அம்ரிஷ் இசையமைத்துள்ளார். தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

parampathamvilayattu paramapathamvilayattu

தற்போது படத்தின் முதல் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. இந்த ஸ்னீக் பீக்கில் இடம்பெற்றுள்ள காட்சியில், மருத்துவமனையில் இருக்கும் ஒட்டுமொத்த சிசிடிவி கேமராக்களையும் அகற்ற வேண்டுமென்று கட்டளையிடும் அரசியல் வாதியை எதிர்க்கிறார் த்ரிஷா. இம்மாதம் பிப்ரவரி 28-ம் தேதி திரைக்கு வரவுள்ளது இப்படம். இதுதவிர்த்து ராங்கி, பொன்னியின் செல்வன் போன்ற படங்களும் த்ரிஷா கைவசம் உள்ளது.