காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா சூரரை போற்று திரைப்படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.இதனை தொடர்ந்து சூர்யா இயக்குனர் ஹரி இயக்கத்தில் தயாராகவுள்ள அருவா மற்றும் வெற்றிமாறன் படங்களில் நடிக்கவுள்ளார்.

Pandiraj Assures To Fan Will Do Film With Suriya

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 40 படத்தை வி க்ரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.சூர்யா தயாரிப்பில் தயாராகியுள்ள பொன்மகள் வந்தாள் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.

Pandiraj Assures To Fan Will Do Film With Suriya

இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இயக்குனர் பாண்டிராஜ் படம் மிக அருமையாக இருந்தது என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.ரசிகர் ஒருவர் சூர்யாவுடன் எப்போது படம் பண்ணுவீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த பாண்டிராஜ் மிகவிரைவில் என்று தெரிவித்துள்ளார்.எனவே இந்த படம் குறித்த அறிவிப்பு குறுகிய இடைவேளையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Pandiraj Assures To Fan Will Do Film With Suriya