லோக்கல் சேனல்களில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து பின்னர் முன்னணி சேனல்களில் தொகுப்பாளியினாக உயர்ந்து அடுத்து சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தீபிகா.தொடர்ந்து சில சினிமா விழா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் தீபிகா.கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான சீரியலில் சப்போர்டிங் ரோலில் நடித்து அசத்தினார் தீபிகா.

அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்திருந்தார் தீபிகா.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் பெரிய ஹிட் அடித்து ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் தீபிகா.

இந்த தொடரின் மூலம் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.இந்த தொடரில் இவர் நடித்து வந்த ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் தற்போது ஈரமான ரோஜாவே தொடரில் நடிக்கும் சாய் காயத்ரி நடிக்கிறார்.இந்த தொடரில் இருந்து தீடிரென்று இவர் ஏன் விலகினார் என்று ரசிகர்கள் காரணம் தெரியாமல் குழம்பி வந்தனர்.

இந்நிலையில் இதுகுறித்த பிரத்யேக தகவல் ஒன்றை நமது கலாட்டா நேர்காணலில் தீபிகா பகிர்ந்துள்ளார்.தனக்கு முகப்பரு பிரச்சனை இருப்பதாகவும் அது தனது கதாபாத்திரத்தை பெரிதும் பாதிப்பதாகவும் சீரியல் குழுவினர் பார்க்கின்றனர் என்றும் மூன்று மாதங்களில் குறைந்துவிடும் என்று எதிர்பார்ப்பித்தோம் ஆனால் அதனை குறைக்கமுடியவில்லை இதுதான் முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார்