சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளராக இருந்து வருபவர் சித்து என்கிற VJ சித்ரா.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளிலும் பணியாற்றிவிட்டார்.ஒரு தொகுப்பாளராக மட்டும் இல்லமால் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று தன்னுடைய நடன திறமைகளையும் நிரூபித்திருந்தார்.

Pandian Stores Vj Chitra Joins Twitter

இதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி,சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட முன்னணி தொடர்களிலும் நடித்துவந்தார்.தற்போது TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வருகிறார்.இது தவிர ஹீரோயினாக கால்ஸ் என்ற படத்தில் கால் சென்டரில் வேலைபார்க்கும் பெண்ணாக நடித்து வருகிறார்.

Pandian Stores Vj Chitra Joins Twitter

கொரோனா பாதிப்பை அடுத்து 3 மாதங்களுக்கு பிறகு தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது.தற்போது சித்ரா ட்விட்டரில் இணைந்துள்ளதாக தனது ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.இதனை அடுத்து ட்விட்டரிலும் சித்திராவின் அப்டேட்கள் கிடைக்கும் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.