சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் பழைய எபிசொட்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.இந்த தொடரில் நடித்துள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.இவர்களது புகைப்படங்கள்,விடீயோக்களை,ஸ்டோரிக்கள் என்று எது வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடும்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் செலவிட்டு வருகின்றனர் இதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரும் விதிவிலக்கல்ல.தங்கள் பக்கத்தில் இருந்து லைவ் வருவது,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,அவர்கள் வைக்கும் சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்று தங்கள் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.

இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வரும் வெங்கட் டான்ஸில் மிகவும் ஆர்வமுடையவர்.அவ்வப்போது தனது நடன திறமைகளை ஒரு விடீயோவாக பதிவிட்டு ரசிகர்களுக்காக வெளியிடுவார்.நடனத்தில் பிண்ணி பெடலெடுக்கும் இவரது வீடியோக்கள் டிக்டாக்கிலும் ட்ரெண்ட் அடித்து வருகின்றன.சமீபத்தில் சீயான் விக்ரமின் சேது படத்தில் இடம்பெற்ற சிக்காத சிட்டொன்று பாடலுக்கு விக்ரமை இமிடேட் செய்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வந்தார்.இதனை தொடர்ந்து சமீபத்தில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு துள்ளாத மனமும் துள்ளும் படத்திலிருந்து மேகமாய் வந்து போகிறேன் என்ற பாடலுக்கு விஜயை போல ஆடி அசத்தியுள்ளார்.இந்த வீடீயோவையும் விஜய் ஆடிய வீடீயோவையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம் 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Megamai vanthu pogiren recreation by our Venkat bro😍😍❤️❤️ @venkat_renganathan 💕 #ashwin #venkatrenganathan #jeeva

A post shared by Rojun❤️ & Ashpooja ❤️ (@roja_serial_luv) on

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விழிக்கும் செவிக்கும் விருந்தாக... . . Thalapathy Vijay Anna paada.... Chinnathirai Rockstar Venkat Anna aada.. Chumma jivvunu iruku.. . . Vijay Anna stageil megamai vanthu poagiren Song paduna Video search panni download panna late aiyiduchu. Athan late aiyiduchu post poada.. . . Anyhow finally I found this video and Edit For My Lovely Brother @venkat_renganathan . . #jeeva #venkat #venkatrenganathan #jeevameena #meena #hema #kathir #kumaran #kumaranthangarajan #kathirmullai #mullai #chithu #chithuvj #dhanam #sujithadhanush #sujitha #pandianstores #pandianstoresofficial #vijaytvpromos #vijaytvshows #tamilserial #vijaytv #pandianstoresvijaytv #tamil #tamilan

A post shared by 💕 VENKAT ANNA FP _ NA EDITS 💕 (@venkat_fp_na_edits) on