விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா, சரவணவிக்ரம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.

இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா கடந்த 2020 டிசம்பரில் தற்கொலை செய்துகொண்டார்.இது ரசிகர்கள் மற்றும் பிரபலன்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.

சித்ரா நடித்துவந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்துவருகிறார்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன.காவியாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன் இந்த தொடரில் என்ட்ரி கொடுத்தவர் வைஷாலி தணிகா.

சரவணவிக்ரமிற்கு ஜோடியாக இவர் இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.ஆனால் சில எபிசோடுகளை அடுத்து இவர் காணாமல் போக இவர் இந்த தொடரில் இருந்து விலகி விட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.இந்நிலையில் சில மாத இடைவேளையை தொடர்ந்து தற்போது இந்த தொடரில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் வைஷாலி,இது குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

A post shared by Vijaytv_Fiction_Non fiction (@vijaytv_fiction_nonfiction)