விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வந்த சித்ரா சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார்.இந்த திடீர் சம்பவத்தால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சித்ராவிற்கு ஹேமந்த் என்பவருடன் இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.ஹேமந்த்திடமும் , அவருடன் நடித்த நடிகர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.இவரது மரணம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்களிடம் அதிர்ச்சியையும்,பல பதிலில்லா கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

இவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.எப்போதும் சந்தோஷமாக மிகவும் தைரியமான பெண்ணான இவர் நிச்சயம் தற்கொலை செய்திருக்க மாட்டார் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.பிரேத பரிசோதனையில் இவர் தற்கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.சித்ராவின் குடும்பத்தினருக்கு பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மிகவும் பிரபலமாக இருந்த முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் திடிரென்று இப்படி முடிவெடுத்ததால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.மேலும் முல்லை என்ற கதாபாத்திரத்துக்கு யாரையும் மாற்றவேண்டாம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.இந்த சோக சம்பவத்திற்கு பிறகு ஷூட்டிங்கை தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் சித்ராவிற்கு அஞ்சலி செலுத்தி மரியாதையை செய்துள்ளனர்.

A post shared by Srinivasan PA (@pa.srinivasan)