சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் பழைய எபிசொட்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.இந்த தொடரில் நடித்துள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுக்கும் எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கின்றனர்.இவர்களது புகைப்படங்கள்,விடீயோக்களை,ஸ்டோரிக்கள் என்று எது வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடும்.

கொரோனா காரணமாக பல பிரபலங்களும் தங்கள் நேரத்தை சமூகவலைத்தளங்களில் ரசிகர்களுடன் செலவிட்டு வருகின்றனர் இதற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரும் விதிவிலக்கல்ல.தங்கள் பக்கத்தில் இருந்து லைவ் வருவது,ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிப்பது,அவர்கள் வைக்கும் சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றுவது என்று தங்கள் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.

இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வரும் சுஜிதா.தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார்.இந்த மாதம் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஆரம்பித்து விடும் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார் சுஜிதா.தமிழில் தனக்கு பிடித்த நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் என்றும் தெலுங்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவியை பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.தான் தமிழ் படங்களில் நடித்ததில் தனக்கு பிடித்தது விக்ரமுடன் நடித்த தாண்டவம் படம் தான் என்று தெரிவித்தார்.தளபதி விஜயுடன் இணைந்து நடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.