தமிழ் சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருந்தவர் தொகுப்பாளினியும்,நடிகையுமான சித்ரா.பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக அசத்தி வந்த இவர் நேற்று திடிரென்று சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

அனைவரிடமும் நம்ம வீட்டு பொண்ணு என்ற அந்தஸ்தில் இருந்த சித்துவிற்கு விரைவில் திருமணம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.ரசிகர்களுடன் எப்போதும் டச்சில் சித்து இருப்பார் அவர்களை சந்திப்பது அவர்களுடன் உரையாடுவது என்று துறுதுறுவென எப்போதும் இருப்பார்.மேலும் சில ரசிகர்களின் பிறந்தநாளையும் இவர் கொண்டாடியுள்ளார்.

இவருடைய வாழ்க்கை பல பெண்களுக்கு ஊக்கமாக இருந்துள்ளது.மிகவும் தைரியமாக தனக்கு வந்த பல பிரச்சனைகளை எதிர்கொண்டு பல வருடங்களாக சின்னத்திரையை கலக்கி வந்தார் சித்ரா.பலரும் சித்ராவை மிக தைரியமான பெண் என்று கூறி வருகின்றனர்,ஆனால் அப்பேற்பட்ட சித்ரா இப்படி விபரீத முடிவு எடுக்க என்ன காரணம் என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இவரது உடலுக்கு இறுதி மரியாதையை ரசிகர்களும் பிரபலங்களும் செலுத்தி வருகின்றனர்.பாண்டியன் ஸ்டோர்ஸ் இவருடன் இணைந்து நடித்து வந்த சுஜிதா இவரது உடலுக்கு இறுதிமறியதை செலுத்திவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது ஒரு தங்கையை இழந்து விட்டேன்,அவ சிரிச்சு மட்டும்தான் நான் பார்த்துருக்கேன் என்று மிகவும் மனமுடைந்து பேசினார்.