விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வந்த சித்ரா சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டார்.இந்த திடீர் சம்பவத்தால் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

சித்ராவிற்கு ஹேமந்த் என்பவருடன் இரண்டு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.ஹேமந்த் நேற்று நள்ளிரவு சித்ராவை தற்கொலை செய்ய தூண்டியதாக கைது செய்யப்பட்டார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மிகவும் பிரபலமாக இருந்த முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் திடிரென்று இப்படி முடிவெடுத்ததால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.மேலும் முல்லை என்ற கதாபாத்திரத்துக்கு யாரையும் மாற்றவேண்டாம் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.இந்த சோக சம்பவத்திற்கு பிறகு ஷூட்டிங்கை தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் சித்ராவிற்கு அஞ்சலி செலுத்தி மரியாதையை செய்து விட்டு ஷூட்டிங்கை தொடங்கினர்.

புதிய முல்லையாக பாரதி கண்ணம்மா தொடரில்  நடித்து வரும் காவியா நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்திருந்தது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.இந்த தொடரில் முன்னணி வேடத்தில்  நடித்து வரும் சுஜிதா சித்ராவின் மறைவு குறித்தும் சித்ரா இல்லாமல் முதல் நாள் ஷூட்டிங் குறித்தும்  எமோஷனல் ஆக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.