விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருவது அவர்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் தான்.அப்படி விஜய் டிவியின் சீரியல்களுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.பல நட்சத்திரங்களை விஜய் டிவி சீரியல்கள் உருவாக்கியுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா,குமரன்,வெங்கட்,ஹேமா,காவ்யா, சரவணவிக்ரம்  உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.

விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.இந்த தொடர் 750 எபிசோடுகளை கடந்து விஜய் டிவியின் பெரிய ஹிட் தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது.இந்த தொடரில் சில மாதங்களுக்கு முன் சாய் காயத்ரி இணைந்துள்ளார்.பல பரபரப்பான திருப்பங்களுடன் இந்த தொடர் சென்று வருகிறது.

இந்த தொடரில் இணைவதாக பிரபல தொகுப்பாளினியும்,சீரியல் நடிகையுமான ஸ்ரீ அபிநயா சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.இவர் தொடரின் முக்கிய கதாபாத்திரமான முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சில தகவல்கள் பரவி வந்தன.அதற்கு ஒரு வீடியோ மூலம் விளக்கம் கொடுத்து தான் ஒரு புது கதாபாத்திரத்தில் இணைவதாக விளக்கம் கொடுத்துள்ளார்.